செல்போனில் பேசியபடி இயக்குவதால் விபத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

திருப்பூர், செப்.28: திருப்பூரில் செல்போன்களினால் ஏற்படும் விபத்து குறித்து பொதுமக்களுக்கு கொங்கு நகர் போக்குவரத்து போலீசார் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருப்பூர் மாநகரில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. இதில் சில வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது செல்போன்களை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக நாள்தோறும் விபத்துகள் அதிகரித்து வரும் சூழலில் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் கொங்கு நகர் போக்குவரத்து போலீஸ் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு செல்போன் பேசிவாகனத்தை இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் திருச்சியை சேர்ந்த முன்னாள் ரயில்வே பணியாளரும், சமூக ஆர்வலருமான னிவாச பிரசாத் என்பவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.

திருப்பூர் ரயில் நிலையம், அவிநாசி சாலை சந்திப்பு, புஸ்பா தியேட்டர், பெருமாநல்லூர் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் செல்போன் பேசக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சுப்புராமன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், போக்குவரத்து எஸ்ஐ ரமேஷ், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post செல்போனில் பேசியபடி இயக்குவதால் விபத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: