பள்ளி வளாகத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மகள் மோனிகா(10). 5ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வேலு மகள் ராஜலட்சுமி (14). 9ம் வகுப்பு படித்து வந்தார். தோழிகளான இருவரும் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்றுமுன்தினம் இரவு விளையாடி கொண்டிருந்தனர்.

பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த 12 அடி பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. இதில் மாணவிகள் இருவரும் தவறி விழுந்து இறந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலங்களை பெற மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, விஏஓ, சிக்கனாங்குப்பம் ஊராட்சி நிர்வாகம், பள்ளி ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

The post பள்ளி வளாகத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: