திருத்தணி,செப்.28 : செல்லப்பிராணிகளுக்கு இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கூறியுள்ளார். திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- செப்.28ம் தேதி (இன்று) உலக வெறிநோய் தடுப்பு தினம் ஆகும். இந்த தினத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தணி கால்நடை மருந்தகத்தில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஆகையால் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களது செல்லப்பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
The post திருத்தணியில் இன்று செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.