மகளிர் ஹாக்கி; இந்திய கோல் வெள்ளத்தில் மூழ்கியது சிங்கப்பூர்

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் ஹாக்கி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நேற்று சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டது. ஆசிய அளவில் இந்தியா நம்பர் 1 அணியாகவும், சிங்கப்பூர் 7வது இடத்திலும் உளளன.அதற்கேற்ப நேற்றைய ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 6வது நிமிடத்திலேயே உதிதா அபாரமாக கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை தந்தார். அடுத்தடுத்த நிமிடங்களில் இந்திய அணி தொடர்ந்து கோலடிக்க முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 8-0 என முன்னிலை வகித்தது.

2வது பாதியிலும் இந்திய வீராங்கனைகள் ஒருங்கிணைந்து விளையாடி கோல் மழை பொழிந்தனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 13-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. சங்கீதா குமாரி ஹாட்ரிக் கோல் (23, 47, 53வது நிமிடம்) அடித்து அசத்தினார். நவ்னீத் கவுர் ஆட்டத்தின் 14வது நிமிடத்திலேயே தலா ஒரு ஃபீல்டு, பெனால்டி கார்னர் கோலடித்து அதிரடித்தார். உதிதா (6’), சுசீலா சானு (8’), தீபிகா (11’), தீப் கிரேஸ் (17’), நேஹா (19’), சலிமா (35’), மோனிகா (52’), வந்தனா கட்டாரியா (56வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். சிங்கப்பூர் அணி வீராங்கனைகள் கடைசி வரை போராடியும் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்தியா தனது 2வது ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது.

The post மகளிர் ஹாக்கி; இந்திய கோல் வெள்ளத்தில் மூழ்கியது சிங்கப்பூர் appeared first on Dinakaran.

Related Stories: