திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கிறது: எந்த சலசலப்பும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் வைகோ பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார். சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ; திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கிறது என்று குறிப்பிட்டார். இந்தியா கூட்டணியில் அனைத்து கட்சிகளும் தொடர்வதாக அப்போது அவர் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு தொகுதி மறுவரையறை செய்யும் போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி முதலமைச்சரிடம் ஆலோசிப்பதாக வைகோ தெரிவித்தார். எந்த காலகட்டத்திலும் அதிமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எதுவும் இன்னும் தொடங்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

The post திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கிறது: எந்த சலசலப்பும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: