குஜராத்தில் 22 மாவட்டங்களில் கிராமப்புற ‘வைபை’ வசதிகள் உள்பட ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டியில் நடந்த ரோபோ கண்காட்சியை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டு, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டிக்கு இன்று பிரதமர் மோடி வருகை தந்தார். அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ‘ரோபோ’ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத், முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ‘துடிப்பான குஜராத்’ என்ற சர்வதேச உச்சி மாநாட்டையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். மேலும் குஜராத்தில் 22 மாவட்டங்களில் கிராமப்புற ‘வைபை’ வசதிகள் உள்பட ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை சோட்டா உதேப்பூரில் தொடக்கி வைத்தார்.

இதேபோன்று, திறன் திட்டங்களுக்கான பள்ளிகள் இயக்கத்தின் கீழ், ரூ.4,505 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில், ‘துடிப்பான குஜராத் திட்டம் தொடங்கப்பட்டபோது, வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கக்கூடிய கூடிய அளவிற்கு பெரிய ஓட்டல்கள் குஜராத்தில் இல்லை. மாநில அரசின் விருந்தினர் மாளிகைகள், பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைகள் நிரம்பி வழிந்தன. துடிப்பான குஜராத் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், குஜராத்தின் தன்னம்பிக்கை அதிகரித்தது. உலகம் வியக்கும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குஜராத்துக்கு வந்தனர். முந்தைய ஆட்சிகாலத்தின் குஜராத்தின் வளர்ச்சிகள் தடுக்கப்பட்டன’ என்றார்.

The post குஜராத்தில் 22 மாவட்டங்களில் கிராமப்புற ‘வைபை’ வசதிகள் உள்பட ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: