உலக கோப்பை அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

ராஜ்கோட்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. இதனிடையே இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அஸ்வினின் அனுபவம் மற்றும் அவரது அபார திறனை யாராலும் மறுக்க முடியாது.

அவர் அபாரமாக பந்து வீசி உள்ளார். அதில் வேரியேஷனும் பெற்றுள்ளார். அது அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அவர் அணியில் இடம் பெறும் வாய்ப்பு இருந்தால் அது நிச்சயம் பலன் தரும். கடந்த ஒரு வருடமாக அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. அப்படி இருந்தாலும் அவரிடம் இருக்கும் தரத்தையும் அனுபவத்தையும் உங்களால் பறிக்க முடியாது.

கடந்த இரண்டு ஆட்டங்களில் அவர் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார் என்பதை நாங்கள் பார்த்தோம். உலகக் கோப்பை அணியில் மாற்றம் இருக்குமா? என்றால், இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கிறது. 28ம் தேதி வரை எங்களுக்கு நேரமும் இருக்கிறது. யாருக்கும் காயம் ஏற்படாது என்று நம்புகிறேன். எனவே பொறுத்துப் பார்ப்போம். வீரர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் ஃபார்ம் உடனும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்., என்றார்.

The post உலக கோப்பை அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: