வெங்கடேஷ் பண்ணையாரின் 20வது ஆண்டு நினைவு தினம்

*அம்மன்புரத்தில் ஏராளமானோர் அஞ்சலி

உடன்குடி :அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 20வது ஆண்டு வீர வழிபாடு, அம்மன்புரத்தில் பண்ணையாரின் நினைவிடத்தில் நேற்று நடந்தது. பூஜையில் அவரது மனைவியும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான ராதிகாசெல்வி குடும்பத்தினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பனங்காட்டு மக்கள் கழக நிறுவன தலைவர் சுபாஷ் பண்ணையார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத், வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, பஞ்சாயத்து தலைவர்கள் அம்மன்புரம் ஞானராஜ், புறையூர் செல்வக்குமார், நாலுமாவடி பஞ். முன்னாள் தலைவர் பிரபாகரன், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ரமேஷ், கானம் நகர அதிமுக செயலாளர் செந்தமிழ்சேகர், திருச்செந்தூர் நாடார் உறவின்முறை முன்னேற்ற சங்க தலைவர் சண்முகவேல், செயலாளர் கோடீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தையொட்டி ஆறுமுகநேரி, ஆத்தூர், பழையகாயல் பகுதிகளில் மருந்தகங்கள், பால் விற்பனையகம் தவிர அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 5 ஏடிஎஸ்பிகள், 16 டிஎஸ்பிகள், 62 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 1700க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

The post வெங்கடேஷ் பண்ணையாரின் 20வது ஆண்டு நினைவு தினம் appeared first on Dinakaran.

Related Stories: