ஹாப்பி பர்த்டே கூகுள்… சிறப்பு டூடூலை வெளியிட்டு சில்வர் ஜூப்லி கொண்டாட்டம்… பயனர்களுக்கு நன்றி தெரிவித்த நிறுவனம்!!

கலிபோர்னியா: உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று தனது 25-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. கூகுள் பகவான் என கடவுள் போல நம்பும் அளவுக்கு நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. நாம் தினசரி பயன்படுத்தும் இணையதளத்தில் இன்றியமையாதது கூகுள். எந்த சந்தேகம் தோன்றினாலும் எதை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினாலும் அதற்கு முதல் நுழைவாயிலாக இருப்பது இந்த மேம்படுத்தப்பட்ட தேடுபொறியே. அவ்வாறாக இருக்கும் கூகுள் இன்று தனது 25-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

செர்கே ப்ரின், லாரி பேஜ் இருவரால் 1998-ம் ஆண்டு இதே நாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் இன்று இணையதள பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் 430 கோடிக்கு அதிகமான பயனாளிகளை வைத்திருக்கும் கூகுள் ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்தி கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் வரைபடம் மூலம் வழி சொல்வதில் இருந்து பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டவும் உதவும் கூகுளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பெருமை கொள்ளவோம்.

கூகுள் 1998-ம் ஆண்டிலிருந்து நிறைய மாறிவிட்டது என்பதை வலியுறுத்தி இன்றைய டூடுலில் காணப்பட்ட அதன் லோகோ உட்பட மாற்றியுள்ளது. ஆனால், அதன் நோக்கம் அப்படியே உள்ளது என்று கூறுகிறது. உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து அதை உலகளாவிய அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக பயணித்ததற்காக பயனர்களுக்கு நன்றி தெரிவித்து, எதிர்காலம் நம்மை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

The post ஹாப்பி பர்த்டே கூகுள்… சிறப்பு டூடூலை வெளியிட்டு சில்வர் ஜூப்லி கொண்டாட்டம்… பயனர்களுக்கு நன்றி தெரிவித்த நிறுவனம்!! appeared first on Dinakaran.

Related Stories: