கரூர், செப். 27: மிலாடிநபி, காந்திஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 28ம்தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் 2ம்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு டஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல் 3 உரிமம் பெற்ற ஓட்டல்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் (டாஸ்மாக் கடைகள்) மற்றும் எப்எல்3 உரிமம் கூடங்கள் மூடப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post மிலாடிநபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை appeared first on Dinakaran.