திருப்பூரில் கிறிஸ்தவ புத்தக கண்காட்சி 29ம் தேதி வரை நடைபெறுகிறது

 

கோவை, செப்.27: திருப்பூர் அவினாசி சாலை காந்திநகர் எம்சி மஹால் பின்புறம் உள்ள எல்இஎப் சென்டரில் கிறிஸ்தவ புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. “அழகிய புத்தகங்கள்” என்ற பெயரில் 25ம் தேதி திங்கட்கிழமை தொடங்கிய கண்காட்சி 29ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இங்கு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பரிசுத்த வேதாகமம், வேத ஆராய்ச்சி குறிப்புகள், வியாக்கியான புத்தகங்கள், வசன அட்டைகள், பரிசு பொருட்கள், ஸ்டிக்கர்கள், வேதாகம உறைகள், துதி ஆராதனை தொகுப்பு பாடல் புத்தகங்கள், பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள், தியான புத்தகங்கள், வேதாகம விளக்க உரைகள், சிறுவர் வெளியீடுகள், சாவி சங்கிலிகள் உட்பட கிறிஸ்தவ ஆவிக்குறிய அனைத்து வெளியீடுகளும் கிடைக்கும். 25ம் தேதி நடந்த துவக்க விழாவில் அனைத்து சபை போதகர்கள் கூட்டமைப்பினர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் டேவிட் அற்புதராஜ், ஜோஷ்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திருப்பூரில் கிறிஸ்தவ புத்தக கண்காட்சி 29ம் தேதி வரை நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: