ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி

 

பெரியகுளம், செப். 27: பெரியகுளத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய தாய்ப்பால் மாத விழா விழிப்புணர்வு பேரணியை அங்கன்வாடி பணியாளர்கள் நடத்தினர். இந்த பேரணியின் போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தையும், துரித உணவு வகைகளை குழந்தைகளுக்கு தவிர்ப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்து பேரணியில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு கோசம் எழுப்பினர். இந்த பேரணியானது பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தொடங்கி, விஆர்பி நாயுடு தெரு, அரண்மனைக்தெரு, சுதந்திர வீதி, மார்க்கெட் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தென்கரை காந்தி சிலை முன்பாக முடிவுற்றது.

The post ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: