இந்நிலையில் கொரோனா வைரசை காட்டிலும் பல மடங்கு வீரியமிக்க புதிய வைரஸ் ெதாற்று வரும் என்றும், அந்த வைரஸ் கொரோனாவை காட்டிலும் ஏழு மடங்கு ஆபத்தானது என்றும், புதிய தொற்றுநோயால் சுமார் 5 கோடி மக்கள் இறக்க நேரிடும் என்றும், கடந்த 1918-1920ம் ஆண்டு காலகட்டத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய ‘ஸ்பானிஷ்’ காய்ச்சலைப் போலவே ஆபத்தானது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
புதியவகை வைரசுக்கு ‘எக்ஸ்’ வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணரும், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம் கூறுகையில், ‘விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வகை வைரஸ்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்முடிவில் புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘எக்ஸ்’ என்ற வைரஸ் பரவினால் குறைந்தது 5 கோடி மக்களை கொல்லக் கூடியதாக இருக்கும்.
இந்த தொற்றுநோயை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கும். கொரோனா வைரஸை விட 7 மடங்கு ஆபத்தானது. எக்ஸ் தொற்றுநோய் பரவுவதற்கு முன்னதாக, அதை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 25 வகையான வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.
The post உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்த கொரோனாவை விட 7 மடங்கு ஆபத்தான ‘எக்ஸ்’ வைரஸ் வருது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை appeared first on Dinakaran.