ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 3வது தங்கத்தை வென்றுள்ளது. குதிரையேற்றம் DRESSAGE பிரிவில் இந்திய அணி வாகை சூடியது. ஏற்கனவே துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. அனுஷ் அகர்வால, திவ்யக்ரித்தி சிங், பிபுல் சேடா ஆகியோர் கொண்ட அணி தங்கம் வென்று அசதியுள்ளது.
பெண்கள் பங்கேற்கும் ஐஎல்சிஎல்-4 வகை போட்டிகளில் மொத்தம் 11 ரேஸ்கள் உள்ளன. இதில் 32 புள்ளிகளுடன் முடித்திருக்கும் இந்தியாவின் நேகா தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கிய விளையாட்டு போட்டிகள் இரண்டு நாள்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 13 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இதையடுத்து சிறுமிகளுக்கு நடைபெறும் ஐஎல்சிஏ – 4 வகையிலான படகு போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை நேகா தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் மூன்றாவது நாளில் சீனாவில் நிங்போவில் படகுபோட்டி நடைபெற்று. இதில், இந்தியாவில் போபாலில் உள்ள தேசிய படகு பள்ளியை சேர்ந்த வளர்ந்து வரும் வீராங்கனையான நேகா 32 புள்ளிகளை பெற்றார். ஆனால் அவரது நிகர புள்ளி 27 என இருந்தது. தங்கம் வென்ற தாய்லாந்து வீராங்கனை நோப்பசோர்ன் குன்பூஞ்சன் என்பவரை விட குறைவாக இருந்தது. இதனால் இரண்டாம் இடத்தை பிடித்த நேகா வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
The post ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 3வது தங்கத்தை வென்றுள்ளது appeared first on Dinakaran.
