இதன் ஒரு பகுதியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர், மருத்துவமனையில் நோயாளி படுக்கைகள் எவ்வளவு உள்ளது, ஆக்சிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கை, பேரிடர் ஏற்பட்டால் அதற்கு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளதா? தீவிர சிகிச்சை பிரிவில் அனைத்து நோய்களின் விவரம், கொரோனா காலத்தில் செயல்பட்ட அறைகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பல்நோக்கு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரிடர் மேலாண்மை தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரவி, டாக்டர் எஸ்தர் மற்றும் மருத்துவமனை நர்சுகள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
தென்காசி: தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.கலைஞர் நூற்றாண்டு மற்றும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தென்காசி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வெள்ளம் மற்றும் தீ விபத்து காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர்கள் சுரேஷ் ஆனந்த், பிரதீப்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், தென்காசி தாசில்தார் சுப்பையன், பேரிடர் மேலாண் தாசில்தார் அரவிந்த், நிலைய அலுவலர் ரமேஷ், சிறப்பு நிலைய அலுவலர்கள் கணேசன், ஜெயரத்தினகுமார், ஜெயபிரகாஷ்பாபு மற்றும் குழுவினர், மருத்துமனை செவிலியர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்கள் பொதுமக்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பேரிடர் காலங்களில் நோயாளிகளை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இடர்பாடுகளில் சிக்கிய நோயாளிகள் மற்றும் பொதுமக்களை கயிறு மற்றும் ஏணி மூலம் மீட்பது தீயணைப்பாண்களை இயக்குவது போன்ற ஒத்திகை தீயணைப்பு துறை கமோண்டோ வீரர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. வீடுகளில் உபயோகபடுத்தும் பொருட்களை கொண்டு வெள்ள காலங்களில் எவ்வாறு தன்னையும் பிறரையும் தற்காத்து கொள்வது என்பது குறித்து பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டது.
The post வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நெல்லை, தென்காசி அரசு மருத்துவமனைகளில் பேரிடர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.
