பெரியார் பிறந்த நாள் விழா

 

காங்கயம், செப்.26: காங்கயத்தில் பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில், பெரியாரின் பெண்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவுக்கு அமைப்பின் நிர்வாகி அமுதினி காயத்ரி தலைமை வகித்து, பெரியாரின் பெண்கள் அமைப்பின் 3ம் ஆண்டு துவக்கத்தை வாழ்த்தியும், சமூகத்துக்கு பெண் விடுதலைக்கு பெரியார் போராடிய போராட்டங்கள் குறித்தும் உரையாற்றினார்.

பெரியார் படத்தை காங்கயம் நகர்மன்ற துணைத் தலைவர் கமலவேணி திறந்து வைத்தார். மேலும் காரல் மார்க்ஸ் நூலகத்தின் 6ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், பெரியாரின் பெண்கள் அமைப்பின் காங்கயம் நிர்வாகிகள் ஜென்னி, ஜோதி, செங்கொடி, தற்சார்பு விவசாய சங்கத் தலைவர் திருமூர்த்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் காங்கயம் நிர்வாகிகள் கவி, கண்ணுசாமி, கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரியார் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: