கலைஞர் பூங்கா வனம் திறப்பு

 

பல்லடம்,செப்.26: பல்லடம் அருகேயுள்ள பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் 3 ஏக்கர் தரிசு நிலத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி டாக்டர் கலைஞர் பூங்கா வனம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சொட்டு நீர் பாசனத்துடன் 501 மரக்கன்றுகளை நடும் பணியை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

மாவட்ட கழக துணை செயலாளர்கள் வக்கீல் எஸ்.குமார், வக்கீல் நந்தினி, ஒன்றிய கழக செயலாளர்கள் என்.சோமசுந்தரம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் அசோகன், மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பி.ஏ.சேகர், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பூமலூர் ஊராட்சி தலைவர் பிரியங்கா, துணைத்தலைவர் நடராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில் என்கிற தியாகராஜன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அக்ரோ சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.ஜி.பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பி.சி,கோபால், ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் பல்லடம் ராஜசேகரன், பல்லடம் நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் அபிபுல்லா, கயாஸ்அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பூங்கா வனம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: