அனைத்து வாய்ப்புகளிலும் வீராங்கனைகளுக்கு பாலியல் சீண்டல்… மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் புகார்..!!

டெல்லி: பாலியல் புகாருக்கு ஆளான இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வீரக்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என்று டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். 17 வயதான இந்திய மல்யுத்த வீராங்கனை உட்பட 6 வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என்பது மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீதான புகார் ஆகும்.

அவர் மீது போக்ஸோ உள்பட 2 வழக்குகள் தொடரப்பட்ட போதும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் வழக்கு மீதான விசாரணை டெல்லி கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த டெல்லி போலீசார் அதில் பிரிஜ் பூஷன் செய்த பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக வீராங்கனைகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்று இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல் வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம் சாட்டினார். ஆசிய சாம்பியன் சிப் போட்டி நடைபெற்ற இந்திய வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக கட்டி அணைத்தார் என்றும் தந்தையை போன்று இதை செய்ததாக அவர் தன்னிலை விளக்கம் அளித்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post அனைத்து வாய்ப்புகளிலும் வீராங்கனைகளுக்கு பாலியல் சீண்டல்… மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: