திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

கிருஷ்ணகிரி, செப்.25: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அலைகடலென திரண்டு வாருங்கள் என்று கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அலைகடலென திரண்டு வாருங்கள். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 20 அணிகளின் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழிநெடுகிலும் தாரை, தப்பட்டை முழங்க பிரமாண்ட ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், கிழக்கு மாவட்ட தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணியினர், பி.எல்.ஏ-2 பூத் கமிட்டி, கிளை செயலாளர், திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டு, அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எம்ஏ., தெரிவித்துள்ளார்.

The post திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: