ஓய்வூதியம் உயர்த்த பென்சனர் வேண்டுகோள்

 

திருப்பூர், செப்.25: 70 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வூதியத்தை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க 12வது ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ‘ஓய்வு பெற்ற காவலர்கள் அனைவருக்கும், மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கவேண்டும்.

ஓய்வு பெற்ற காவலர் இறந்தால், கேரள அரசு, குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி, அடக்கம் செய்கிறது. இதே நடைமுறையை தமிழ்நாடு அரசும் பின்பற்றவேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் ஓய்வூதியத்தை அதிகரித்து வழங்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், வட்ட கிளை தலைவர் மகுடேஸ்வரன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post ஓய்வூதியம் உயர்த்த பென்சனர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: