திருப்பூர் மீன் மார்க்கெட் வெறிச்சோடியது

 

திருப்பூர், செப்.25: புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் திருப்பூர் மீன் மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பூர் மீன் மார்கெட்டிற்கு கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமேஸ்வரம், கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில் கடந்த 18ம் தேதி புரட்டாசி மாதம் பிறந்தது. இந்த மாதத்தில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் அசைவம் சாபிப்பிடுவதில்லை.

இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டமாக காட்சியளிக்கும், மீன் கடைகள் மற்றும் மட்டன், சிக்கன் கடைகள் நேற்று வாடிக்கையாளர் கூட்டமின்றி வெறிச்சொடி காணப்பட்டன. இதனால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. அசைவ உணவு வகைகளின் விற்பனை சரிந்ததால், காய்கறி விறபனை சூடு பிடித்துள்ளது. திருப்பூர் காய்கறி மார்க்கெட், உழவர் சந்தைகள் மற்றும் அனுப்பர்பாளையம் வாரந்சந்தை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

The post திருப்பூர் மீன் மார்க்கெட் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Related Stories: