சிகரங்கள் அறக்கட்டளை சார்பில் 35 யூனிட் ரத்தம் சேகரிப்பு

 

திருப்பூர், செப்.25: சிகரங்கள் அறக்கட்டளை மற்றும் ட்ரீம்-20 பசுமை அமைப்பு ஆகியவை சார்பில், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சிப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. 35 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. மேலும் ஐ பவுண்டேஷன் மூலம் 90 பேருக்கு கண் சிகிச்சை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 59 குறைபாடுகள் கண்டறிந்து 9 பேர் புரை நீக்க அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். சிகரங்கள் அறக்கட்டளை காமராஜ், ட்ரீம்-20 பசுமை அமைப்பின் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.

The post சிகரங்கள் அறக்கட்டளை சார்பில் 35 யூனிட் ரத்தம் சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: