திருப்பூர், செப்.25: திருப்பூர் தொழிற்துறை நிர்வாகிகளுடன் ஏஐடியுசி தேசிய நிர்வாகிககள் சந்தித்து பேசினர். திருப்பூரில் ஏஐடியுசியின் தேசிய பொதுக்குழு கூட்டம் கடந்த 22ம் தேதி முதல் 24ம் தேதி (நேற்று) வரை நடைபெற்றுது. இதில், அந்த அமைப்பின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பங்கேற்க திருப்பூர் வந்துள்ளனர். திருப்பூர் எம்கேஎம் ரிச் ஓட்டலில் இந்த நிர்வாகிகளுடன் திருப்பூரைச் சேர்ந்த தொழிற்துறையினர் சந்தித்து பேசினர்.
சாய ஆலைகள் சங்க தலைவர் காந்திராஜன், பொருளாளர் மாதேஸ்வரன், ‘சைமா’ சங்க துணை தலைவர் பாலசந்தர், பொருளாளர் கோவிந்தப்பன், ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி, உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், டீசா அமைப்பு தலைவர் சுரேஷ்பாபு, சிறு பனியன் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் தற்போதைய தொழில் நிலவரம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிற்துறையினரிடம் கேட்டறிந்தனர். தொழிற்துறையினர் தரப்பில் தற்போது நிலவும் மின் கட்டணப் பிரச்னை குறித்து விளக்கப்பட்டது.
The post ஏஐடியுசி நிர்வாகிகளுடன் தொழிற்துறையினர் சந்திப்பு appeared first on Dinakaran.