தேவதானப்பட்டி, செப். 25: தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்(35). கடந்த 17 தேதி இவர் வீட்டில் காதணி நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அவருடைய உறவினர்கள் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை உடன் சீர்வரிரை கொண்டு சென்றுள்ளனர். குள்ளப்புரத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் தெரு வழியாக கொண்டு செல்லக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தி வேறு பாதையில் செல்லுங்கள் என திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொதுப்பாதை தெரு வழியாக செல்ல அனுமதிக்காதவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று குள்ளப்புரம் மற்றும் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் 100கும் மேற்பட்டோர் ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பெரியகுளம் டிஎஸ்பி கீதா பேச்சுவார்த்தை நடத்தினார். தெரு வழியாக செல்ல அனுமதிக்காத குள்ளப்புரத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் 50 பேர் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனாசல் போலீஸ் ஸ்டேசனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post குள்ளப்புரத்தில் தெரு வழியாக சீர் கொண்டு செல்ல அனுமதிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
