4வது மற்றும் கடைசி 15 நிமிட நேர ஆட்டத்தில் மேலும் 4 கோல்களை திணித்த இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 16-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்திய வீரர்கள் வருண் குமார் 4 கோல் (12வது, 36’, 50’, 52வது நிமிடம்), உபாத்யாய் (7வது, 24’ மற்றும் 53வது நிமிடம்), மன்தீப் சிங் (18’, 27’, 28வது நிமிடம்) தலா 3 கோல், சுக்ஜீத் சிங் 2 கோல் (37 மற்றும் 42வது நிமிடம்), அபிஷேக் (17’), ரோகிதாஸ் (38’), ஷம்ஷேர் சிங் (43’), சஞ்சய் (57’) தலா ஒரு கோல் போட்டனர். 3 புள்ளிகளை தட்டிச் சென்ற இந்தியா, அதிக கோல் அடித்த அடிப்படையில் ஏ பிரிவில் முதலிடம் வகிக்கிறது. இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை சிங்கப்பூர் அணியை சந்திக்கிறது.
The post உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கோல் மழை: 16-0 என வென்று அசத்தல் appeared first on Dinakaran.