பெரியபாளையம் அருகே திமுக தெருமுனைக் கூட்டம்

 

ஊத்துக்கோட்டை, செப். 25: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் தெற்கு ஒன்றியம் திருக்கண்டலம் கிராமத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தெருமுனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் சத்தியவேலு தலைமை தாங்கினார். வக்கீல் தேவேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் முனிவேல், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடாச்சலம், கண்ணபிரான், தணிகாச்சலம், ஒன்றிய நிர்வாகிகள் உதயகுமார், ராஜேஸ்வரி பாஸ்கர், குப்பன், உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய பொருளாளர் குப்பன், ஊராட்சி மன்ற தலைவர் மதன், தியாகராஜன், ஆனந்தன், வீரமணிகண்டன், எழில்ராஜ், பழனி, பெய்லி, லிங்காதுரை ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய செயலாளர் சத்தியவேலு, தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா ஆகியோர் சிறப்புரையாற்றி 500 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் நாராயணசாமி, சுரேஷ், கவியரசன், எமிமா அன்பு, விஜய் ஸ்ரீநாத், செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சாம் கமலேசன், வார்டு உறுப்பினர் இளையரசு ஆகியோர் நன்றி கூறினர்.

The post பெரியபாளையம் அருகே திமுக தெருமுனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: