அரசின் இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குழுவில் உறுப்பினராக இடம்பெற மறுத்துவிட்டார்.
இந்த சூழலில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆதிர் ரஞ்சனைத் தவிர்த்து, மற்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும். மக்களவை, சட்டப்பேரவைகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அரசுகள் கவிழ்ந்தால் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், மத்திய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆலோசித்தது. அப்போது நாடு முழுவதும் அனைத்து வாக்காளர்களுக்கும் பொதுவான அடையாள அட்டை, அதற்காக வாக்காளர் பட்டியலில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வது, ஒரே நேரத்தில் வாக்கெடுப்பை நடத்துவதற்காக நடைமுறையில் மாற்றம், அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைகளை கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டது‘ என்றன.
The post ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வாக்காளர்களுக்கு பொதுவான அடையாள அட்டை?: உயர்நிலை குழுவில் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரை appeared first on Dinakaran.