ஆசிய விளையாட்டு போட்டி: முதல் நாளில் இந்தியா பதக்க வேட்டை

ஹாங்சோ:சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முதல் அதிகாரப்பூர்வமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது. இதைத்தொடர்ந்து இந்தியா இன்று பதக்க வேட்டையை துவங்கி உள்ளது. படகோட்டுதல் பிரிவில் மட்டும் இந்தியா மூன்று பதக்கங்களை அள்ளி இருக்கிறது. முன்னதாக படகோட்டுதல் விளையாட்டில் லைட்வெயிட் ஆடவர் இரட்டை ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் 6:28.18 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி வென்றனர்.

அதைத் தொடர்ந்து படகோட்டுதல் ஆடவர் இணைப் பிரிவில் பாபு லால் யாதவ், லேக் ராம் வெண்கலம் வென்றனர். இந்த இணை 6.50.41 நேரத்தில் போட்டி தூரத்தை கடந்து மூன்றாவது இடம் பிடித்தது. அதன் மூலம், இந்தியா வெண்கலம் வென்றது. இதே பிரிவில் ஹாங்காங் தங்கம் வென்றது. உஸ்பெகிஸ்தான் வெள்ளி வென்றது. படகோட்டுதல் ஆடவர் எட்டு பேர் பிரிவில் இந்திய அணி 5.43.௦ நேரத்தில் போட்டி தூரத்தை கடந்து இரண்டாம் இடம் பிடித்தது. அதன் மூலம், இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இதே பிரிவில் சீனா தங்கம் வென்றது. இந்தோனேசியா வெண்கலம் வென்றது. முன்னதாக துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைஃபிள் மகளிர் குழு பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

இதுவே இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும். ரமிதா, மெகுளி கோஷ், ஆஷி சௌக்சி ஆகியோர் கூட்டாக பங்கேற்றனர். அவர்கள் தகுதிச் சுற்றில் ஒட்டு மொத்தமாக 1886 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதுபோல் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.இத்துடன் இந்தியா மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளது. படகோட்டுதலில் மட்டும் மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன.

The post ஆசிய விளையாட்டு போட்டி: முதல் நாளில் இந்தியா பதக்க வேட்டை appeared first on Dinakaran.

Related Stories: