கோவிலடி சிவன் கோயிலில் பெருஞ்சாந்தி பெருவிழா

திருக்காட்டுப்பள்ளி, செப். 24: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திவ்ய ஞானஸ்வரர் கோயிலில் பெருஞ்சாந்தி பெருவிழா எனப்படும் பவித்ரோத்ஸவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை சைவ சாஸ்திர ப்ரசார ஸபா சிவாகம டிரஸ்ட் சார்பில் கோவிலடி, திருக்காஞ்சி, திருவரங்குளம், ஊத்துக்குளி, மிட்டா மண்டகப்பட்டு, வந்தவாசி, குரும்பலூர், கூரைநாடு, மறவளப்பாளையம், புதுப்பேட்டை, கல்பாக்கம், கஞ்சப்பள்ளி ஆகிய ஊர்களில் உள்ள புராதனமான 12 சிவாலயங்களில் பவித்ரோத்ஸவம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் சிவாலயமாக கோவிலடி  அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திவ்யஞானேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பவித்ரோத்ஸவத்தில் காலை காலை சுவாமிக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. வேத, சிவாகம, திருமுறை பாராயணங்களுடன் சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post கோவிலடி சிவன் கோயிலில் பெருஞ்சாந்தி பெருவிழா appeared first on Dinakaran.

Related Stories: