கோபி, செப்.24: உரிமைத்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திமுக விவசாய அணி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் இரு சக்கர வாகன பேரணி கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டி பிரிவில் தொடங்கிய பேரணி, நம்பியூர், புளியம்பட்டி, சத்தி, டி.என்.பாளையம், அத்தாணி, அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி வழியாக மீண்டும் கோபி வந்தடையும் வகையில் இரு சக்கர வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ல.கள்ளிப்பட்டி பிரிவில் மாநில விவசாய அணி இணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி தலைமையில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், மாவட்ட அவை தலைவர் பெருமாள்சாமி, அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில விவசாய அணி இணை செயலாளர் குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இ.ஆர்.சம்பத், மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில விவசாய அணி செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இருசக்கர வாகன பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post கோபியில் மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து இரு சக்கர வாகன பேரணி appeared first on Dinakaran.