கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம்,செப்.24: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கோம்புபாளையத்தில் பிரசித்தி பெற்ற தேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோயில்அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு நேற்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து தேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் தேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசிஇலை , தீர்த்தம்மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: