திருப்பூர் அம்மாபாளையத்தில் ரோட்டில் தேங்கி நிற்கும் மழை நீரால் விபத்து அபாயம்

 

திருப்பூர், செப்.23: திருப்பூர்- அம்மாபாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகே, ரோட்டில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து அவிநாசி செல்லும் ரோட்டில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பிரதான சாலையாக இருந்தாலும், ஆங்காங்கே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலான ஆபத்துகளும் நிறைந்தே உள்ளன. இந்த சாலையில் அம்மாபாளையம் செக்போஸ்ட் அருகே சாலையின் நடுவில் ஆங்காங்கே அபாயக்குழிகள் உள்ளது.

இந்த குழியில் கடந்த சில நாட்களாக மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இந்த குழி அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களாக இருந்தாலும், நான்கு சக்கர வாகனங்களாக இருந்தாலும் சற்று தடுமாறினாலும், இந்த குழியில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், இந்த குழியை மூடி தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்பூர் அம்மாபாளையத்தில் ரோட்டில் தேங்கி நிற்கும் மழை நீரால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: