50வது வார்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு

 

திருப்பூர், செப். 23: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார். இதுபோல், மாநகராட்சி பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டும், நடவடிக்கை எடுத்து வருகிறார். பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இதில், மக்களுடன் மேயர் திட்டத்தின் மூலம் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு மேற்கொள்கிற மேயர் தினேஷ்குமார், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று மக்களுடன் மேயர் திட்டத்தில் 50வது வார்டு பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும், சாலை வசதி, கழிவுநீர் வடிகால் போன்ற தேவைகளை ஆய்வு செய்தார். இதில் வட்ட செயலாளர் சல்மான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post 50வது வார்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: