போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

ஆவடி, செப். 23: ஆவடி மாநகர பேருந்து போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF) ஊழியர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர் முன்னேற்ற சங்க இணைச் செயலாளர் ராஜ்குமார் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுவதாக ஊழியர்கள் பேருந்து நிலைய நுழைவு வாயலில் பதாகைகள் ஏந்தி ராஜ்குமாரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். இதில், ராஜ்குமார் தொழிலாளர்களுக்கு பணி சுமை ஏற்படுத்தும் விதமாகவும், விடுமுறை நாட்களை மாற்றியமைப்பதாகவும் மேலும், தனக்கு பணம் கொடுத்து சாதகமாக செயல்படுபவர்களுக்கு ரூட்பணி மாற்றி அமைத்தும், தொழிலாளர் மத்தியில் சாதி வேறுபாடு மற்றும் தலித் இனத்தவரை மட்டும் குறி வைத்து பழிவாங்குவதாகும் குற்றம் சாட்டுகின்றனர். இவை அனைத்தும் அறிந்த பணிமனை கிளை மேலாளர் யுவராஜ், செயலாளர் ராஜ்குமார் அவர்களின் கை பாவையாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை மேளாளர் யுவராஜ் அவர்களையும் செயலாளர் ராஜ்குமார் அவர்களையும் பணிமாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் முன்னேற்ற கழகம் (LPF)-சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: