எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் பெருநிறுவன ஆளுகை தினம்

திருவள்ளூர், செப். 23: பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுமச் செயலாண்மைத் துறையின் நிறும ஆளுகை மன்றத்தின் சார்பாக கல்லூரியின் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா ஆலோசனையின் பேரில் பெருநிறுவன ஆளுகை தினம் கல்லூரித் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் வி.சாய் சத்யவதி தலைமை தாங்கினார். முதல்வர் மாலதி செல்வக்குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்டின் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் உமா கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் ேபசும்போது, ‘‘ஆளுகையும், தலைமையும் நாணயத்தின் இரு பக்கங்கள். பெருநிறுவன ஆளுகைத் துறையில் வெற்றிகரமான நிபுணராக இருக்க ஒருவர் எவ்வாறு ஆளுகை புரிய வேண்டும் மற்றும் வழிநடத்த வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பெருநிறுவன நன்மதிப்பு மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வணிக வினாடி வினா, பெருநிறுவன நடை, விளம்பரப் போட்டி, வணிகத் திட்ட விளக்கக்காட்சி மற்றும் சிறந்த மேலாளர் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. டேலண்ட் ஹண்ட் 2.0 என்ற பெயரில் நடத்தப்பட்ட இப்போட்டிகள் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் களமாக மட்டுமல்லாமல், அவர்களின் சுய வெளிப்பாட்டையும் தன்னம்பிக்கையையும் மேம்படுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குவனவாகவும் அமைந்தன.

The post எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் பெருநிறுவன ஆளுகை தினம் appeared first on Dinakaran.

Related Stories: