குளித்தலை, செப்.23: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியை. அன்னாள் ஜெய மேரி கல்வித்துறை பணி சுமையால் மன உளைச்சல் காரணமாக உயிரிழந்தார். அதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் குளித்தலை சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் அவரது ஆத்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
The post புள்ளம்பாடி ஆசிரியை இறப்பிற்கு குளித்தலை பள்ளியில் ஆசிரியர் கூட்டணி இரங்கல் appeared first on Dinakaran.