குளித்தலை பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

குளித்தலை, செப்.23: குளித்தலை பெரியார்நகர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி விஸ்தரிப்பு பகுதியில் ஒன்றான பெரியார் நகர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமானோர் மத்திய. மாநில அரசு அலுவலர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் குளித்தலை நகர பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் 2 கிமீ கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அதனால் இப்பகுதி பொதுமக்கள், முதியவர்கள் பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தில் குளித்தலை நகர பகுதிக்கு சென்று தங்களுடைய அலுவல் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்புகின்றனர். ஒரு சிலர் வாகன வசதி இல்லாதவர்கள் வெளியூரில் இருந்து உறவினர்கள் வீட்டுக்கு வந்தவர்கள் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நகர பேருந்துகளில் குளித்தலை பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்

அதே போல் பெட்டவாய்த்தலை பகுதிக்கு செல்ல வேண்டுமென்றாலும் இந்த பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று தான் செல்ல வேண்டும். இந்நிலையில் வெயில் மற்றும் மழைக்காலங்களில் நிழற்குடை இல்லாமல் அமரும் வசதி இல்லாமலும், பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது உட்கார வசதியின்றி நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் தற்காலிக தகரக்கொட்டகை ஒன்று போடப்பட்டு இருப்பதால் பெரும்பாலான நேரத்தில் அந்த கொட்டகையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திமிடமாக இருந்து வருகிறது.

இதனால் நகர பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் நிற்பதற்கு இடமில்லாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக குளித்தலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நலன் கருதி புதிய நிழற்குடையை பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குளித்தலை பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: