சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து.. உயிர் தப்பிய பயணிகள்

செம்பரப்பாக்கம் : சென்னையில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்ற மின்சார சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு பெங்களூருவை நோக்கி மின்சார ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. செம்பரப்பக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, சிக்னல் ஒன்றில் நின்ற அந்த பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இதனால் சொகுசு பேருந்தின் பின்புறம் தீப்பற்றி எரிந்ததை கவனித்த ஓட்டுனர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றினார்.

இதையடுத்து சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் பற்றி எரிந்த தீயை அப்பகுதி மக்கள் அணைக்க போராடினர். தீயனை அணைத்து கொண்டு இருக்கும் போது, திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து, பேருந்து முழுவதும் தீப்பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தில் பற்றி எரிந்த தீயனை அணைக்கும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் அரை மணி நேரத்தில் கட்டுக்கடங்காமல் எரிந்த தீயால் பேருந்து முழுவதும் சேதம் அடைந்தது. இந்த விபத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து.. உயிர் தப்பிய பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: