அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25ம் தேதி கிருஷ்ணகிரி வருகை

கிருஷ்ணகிரி, செப்.22: கிருஷ்ணகிரிக்கு வருகிற 25ம் தேதி வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திரண்டு வாருங்கள் என்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக, வருகிற 25ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பெங்களூரு சாலையில் மாவட்ட திமுக அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகத்தை திறந்து வைக்கிறார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டடத்தைச் சேர்ந்த 20 அணிகளின் சார்பில், பிரமாண்டமாக வரவேற்பு அளித்து வழிநெடுகிலும் திமுக கொடி ஏந்தி தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகிறார்.

பின்னர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மூத்த முன்னோடிகள் 1,800 பேருக்கு பொற்கிழி வழங்க உள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெறும் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே, கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர், துணை தலைவர், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணியினர், பி.எல்.ஏ.2 பூத் கமிட்டி, கிளை செயலாளர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் திரளாக கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மதியழகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு மனுக்கள் அனுப்பி
வைத்த சிவசேனா கட்சியினர்ஓசூர், செப்.22: பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் கிராமத்தில் சதுர்த்தி விழாவின் போது, உரிய அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை சிலர் அமைத்ததாக கூறி, சிலையை போலீசார் அகற்றினர்.

மேலும், அங்கிருந்த பெண்களை கைது செய்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது, அவர்களை ேபாலீசார் தரக்குறைவாக நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இச்செயலில் ஈடுபட்ட போலீசார் மீதும் அதற்கு ஆணையிட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனாதிபதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு, சிவசேனா கட்சியினர், ஓசூர் தபால் அலுவலகத்தில் இருந்து மனுக்களை அனுப்பி வைத்தனர். இதில், மாநில அமைப்பு செயலாளர் முரளிமோகன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25ம் தேதி கிருஷ்ணகிரி வருகை appeared first on Dinakaran.

Related Stories: