கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் மீது தாக்குதல்

 

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(19). தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கிள் கும்புலி கிராமம் அரசு பள்ளி வளாகம் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் வழிமறித்தனர். எனக்கு வழி விடுங்கள் என நந்தகுமார் கூறியதாக கூறப்படுகிறது.

இதில், அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களும் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து, நந்தகுமார் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னை தாக்கிய இரண்டு வாலிபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: