காஞ்சி மாவட்டத்தில் மிதமான மழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சில தினங்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் மாலையில் குளிர்ச்சியான காற்று வீசுவதுமான சூழல் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இதேபோன்று, காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளான பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்
(மி.மீ)
காஞ்சிபுரம் – 13.40 மிமீ
வாலாஜாபாத் – 13.00 மிமீ
உத்திரமேரூர் – 43.00 மிமீ
|ஸ்ரீபெரும்புதூர் – 30.00 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

The post காஞ்சி மாவட்டத்தில் மிதமான மழை appeared first on Dinakaran.

Related Stories: