ராம் ஏற்கனவே சில மாதங்கள் மட்டுமே வங்கதேச அணிக்காக பணியாற்றி உள்ளார். அதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தயங்கி உள்ளது. ஆனால் ஸ்ரீராமின் திறமைகளை பட்டியலிட்ட ஷாகிப், கூடவே வங்கதேச அணி தொடர்ந்து சொதப்பி வருவதையும் வாரியத்திடம் சொல்லியுள்ளார். அணியின் இப்போதைய பயிற்சியாளர் சந்திக அதுருசிங்க(இலங்கை) தனியாளாக அணியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அதனால் ஸ்ரீராமின் அவசியத்தை உணர்ந்த வாரியம், கேப்டன் ஆலோசனைப்படி அவரை ஆலோசகராக நியமித்துள்ளது. இப்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் வங்க அணியுடன் ராம் உடனடியாக இணைகிறார். பிறகு உலக கோப்பையில் விளையாடும் வங்க அணியுடன் இந்தியா வருவார்.
The post உலக கோப்பைக்கான வங்கதேச ஆலோசகராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம் appeared first on Dinakaran.