மேலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மணப்பாக்கம் கொளப்பாக்கம் கிருகம்பாக்கம் சாலையில் 4 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் 2 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற சாலைப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அளிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் பணிகளை போக்குவரத்திற்கு இடையூறில்லாமல் மேற்கொள்வதற்கும், பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வுப் பணிகளை முடித்த பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில், தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் மு.அ. சித்திக், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன், முதன்மை பொது மேலாளர் அசோக் குமார் ஆகியோருடன் சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
The post சென்னையில் மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.