எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது: செல்லூர் ராஜுவை Nose Cut செய்த அண்ணாமலை

கோவை: எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

செல்லூர் ராஜு கோரிக்கையை நிராகரித்தார்: அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பழனிசாமியை அடுத்த முதல்வர் ஆக்க வேண்டும் என்ற செல்லூர் ராஜு கோரிக்கையை அண்ணாமலை நிராகரித்தார்.

இறங்கி போக முடியாது அண்ணாமலை:
பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டது. அதிமுக பணிந்து போகும் நிலையில், தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்க முடியாது என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுகவினர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக இறங்கி போக முடியாது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது சகஜம்தான். அடிப்படையில் கொள்கை ரீதியாக கட்சிகள் வேறுபட்டுள்ளன என தெரிவித்தார்.

அதிமுக – பாஜக இடையே பிரச்சனை இல்லை: அண்ணாமலை
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனக்கு யாரிடமும் எந்த பிரச்சனையும் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார்.

மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை
அண்ணா குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அண்ணா பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தும் நிலையில் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

The post எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது: செல்லூர் ராஜுவை Nose Cut செய்த அண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: