பாஜகவுக்கு பணிந்ததா அதிமுக?.. இரண்டே நாளில் பல்டி: கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!!

மதுரை: அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். பாஜகவோடு கூட்டணி தொடர்வதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பாஜகவோடு அதிமுக கூட்டணியில் இல்லை என ஜெயக்குமார் அறிவித்திருந்த நிலையில் கூட்டணி தொடர்வதாக செல்லூர் ராஜு தெரிவித்தார். அண்ணா குறித்து பேசிய கருத்துகளை தவறு என்றுதான் சொன்னோம் என்று அவர் கூறினார்.

பாஜகவிடம் பணிந்தது அதிமுக!

எங்களுக்கு மோடியோ, அமித்ஷாவோ, நட்டாவோ பிரச்சனை இல்லை. மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் எங்கள் பொதுச்செயலாளரையும் மதிக்கிறார்கள்; எங்களையும் மதிக்கிறார்கள். அண்ணாமலை இப்படி பேசுகிறாரே என்ற வருத்தத்தையே பதிவு செய்தோம்; வேறு எதுவும் இல்லை.

பாஜக – அதிமுக இடையே எந்த பிரச்சனையும் இல்லை:

மோடியே அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று நாங்களும்தான் நினைக்கிறோம். அதேபோல் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என்று பாஜக அறிவிக்க வேண்டும். அண்ணாமலை நடைபயணம் செல்லட்டும்; கட்சியை வளர்க்கட்டும்; அதில் எங்களுக்கு கவலை இல்லை.

இரண்டே நாட்களில் அதிமுக பல்டி:

அண்ணாமலை யாத்திரையை வசூல் யாத்திரை என சி.வி.சண்முகம் கூறிய நிலையில், யாத்திரையை எந்தக் குறையும் சொல்லவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த ஜெயக்குமார் பெயரை சொல்லாமல் செல்லூர் ராஜு மழுப்பல். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்த 2 நாட்களில் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார். பாஜக சார்பில் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படாத நிலையில் செல்லூர் ராஜு திடீர் விளக்கம் அளித்துள்ளார்.

The post பாஜகவுக்கு பணிந்ததா அதிமுக?.. இரண்டே நாளில் பல்டி: கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: