தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்

திருப்பூர், செப்.21: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து, ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக, பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பம் செய்ய விரும்புகிறவர்கள் தங்களது விண்ணப்பங்களை அடுத்த மாதம் 20-ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களில் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன்படி மனை வரைபடம், கடை அமைக்க இருக்கும் இடத்தின் வரைபடம் 2 பிரதிகள், கடை அமைக்கப்பட இருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள் உரிய கணக்கு தலைப்பின் கீழ் அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிம கட்டணம் ரூ.600-ஐ www.karuvoolam.tn.gov.in/challan/echallan என்ற இணைய தளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டு, மனுதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் எனில், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்துவரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் எனில், வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட சம்மத கடிதம், விண்ணப்பதாரர் புகைப்படம், விண்ணப்பதாரரின் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன், நிர்வாக காரணங்களை முன்னிட்டு அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன் பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: