அத்திப்பள்ளம் பள்ளி மாணவர்கள் சாதனை

போச்சம்பள்ளி, செப்.21: மத்தூர் சரக அளவிலான விளையாட்டு போட்டியில் அத்திப்பள்ளம் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். தடகள போட்டிகளில், 17 வயதிற்குட்ட மாணவிகள் பிரிவில் கீர்த்திகா 800மீ ஓட்டத்தில் முதலிடமும், 400மீ ஓட்டத்தில் 2ம் இடமும், கௌரி 3000 மீ ஓட்டத்தில் 3ம் இடமும், நிவேதா வட்டு எறிதலில் 3ம் இடமும், லாவண்யா 400 மீ மற்றும் 4.400 தொடர் ஓட்டத்தில் 2ம் இடமும் பிடித்துள்ளனர். ஆண்களுக்கான 3000 மீ ஓட்டத்தில் ஹரிஷ் முதல் இடமும், டேவிட் 2ம் இடமும், வட்டு எறிதலில் ரவிச்சந்திரன் 3ம இடம் பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவலிங்கம், உடற்கல்வி இயக்குனர் சிவசங்கரி மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.

The post அத்திப்பள்ளம் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: