ஹாங்சோவில் நேற்று நடந்த ஆசிய விளையாட்டு ஆண்கள் வாலிபால் போட்டியில், 3 முறை சாம்பியனான தென் கொரியவுடன் மோதிய இந்தியா 3-2 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
முதல் செட்டை 25-27 என இழந்த இந்திய அணி, அடுத்த 2 செட்டையும் 29-27, 25-22 என கைப்பற்றி முன்னிலை பெற்றது. 4வது செட்டில் தென் கொரியா 25-20 என வெற்றியை வசப்படுத்த 2-2 என சமநிலை ஏற்பட்டது. 5வது மற்றும் கடைசி செட்டில் இந்தியா 17-15 என வென்றுநாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 38 நிமிடத்துக்கு நீடித்தது.
The post தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.
