டெஸ்ட்டில் 51 சதம் அடித்த சச்சின் சாதனையை கோஹ்லி முறியடிப்பது கடினம்: மஞ்ச்ரேக்கர்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், வர்ணனையாளருமான மஞ்ச்ரேக்கர் கூறியதாவது: கோஹ்லிக்கும், டெண்டுல்கருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால், இருவரும் கிரிக்கெட்டை விளையாடுவதை ரசிக்கிறார்கள். அவர்கள் களத்தில் இருக்க விரும்புகிறார்கள். ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லி ஆடாவிட்டாலும் களத்தில் கவனம் ஈர்த்தார். கோஹ்லிக்கு அதிகாரம், கேப்டன் பதவி தேவையில்லை. களம் இறங்கி விளையாடாவிட்டாலும் அணியில் ஒரு அங்கமாக இருப்பது போல் தெரிகிறது.

அவர் நீண்ட காலமாக கேப்டனாக இருந்தார். அணியுடன் இருப்பது, வீரர்களுடன் பயணம் செய்வது, அதிகாரத்தை விட மைதானம் மற்றும் வெற்றியின் ஒரு பகுதியாக இருப்பது அவருக்கு மிகவும் முக்கியமானது, என்றார். மேலும் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த சச்சின் சாதனையை கோஹ்லி முறியடித்தாலும், டெஸ்ட்டில் சச்சினின் 51 சதம் சாதனையை முந்துவது கடினம். டெஸ்ட்டில் 29 சதம் அடித்துள்ள அவருக்கு சச்சின் சாதனையை முறியடிப்பது கடினமாக இருக்கும், என்றார்.

The post டெஸ்ட்டில் 51 சதம் அடித்த சச்சின் சாதனையை கோஹ்லி முறியடிப்பது கடினம்: மஞ்ச்ரேக்கர் appeared first on Dinakaran.

Related Stories: