கரூர் தோகைமலையில் விசிக ஆலோசனை கூட்டம்

 

தோகைமலை, செப். 20: தோகைமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கரூர் மாவட்டம் தோகைமலை மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமைவகித்தார். கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சிசக்திவேல், கல்வி விழிப்புணர்வு மாவட்ட அமைப்பாளர் பாலகுமார், ஒன்றிய பொருளாளர் மகாதேவன், ஒன்றிய துணை செயலாளர் மலைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதான ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற தொகுதி துணைச்செயலாளர் லெட்சுமணன் கலந்து கொண்டார்.

இதில் வருகின்ற அக்டோபர் மாதம் 8ம் தேதி தோகைமலையில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடத்துவது, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை நியமனம் செய்வது அக்டோபர் 5ஆம் தேதிக்குள் தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் கட்சியின் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்யவேண்டும். அக்டோபர் மாத இறுதிக்குள் அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று தோகைமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post கரூர் தோகைமலையில் விசிக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: